Skip to main content

ஒபிஎஸ் மகன் பாஜகவில் இணையப்போகிறாரா? ஜெய ஆனந்த் பதில்!!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

புதுக்கோட்டையில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளர் ஜெய ஆனந்த் திவாகரன் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது..
     

jai anand interview

 

அமமுகவின் நிலை குறித்து கடந்த ஒரு வருடமாக நான் ஊடகங்களில் சொன்னேன். அப்போது ஊடகங்களோ, அங்கே கூட்டம் இருக்கு அது இது என்றார்கள். ஆனால் தேர்தல் முடிவு என்னாச்சு. 22.5 லட்சம் ஓட்டு தான் வாங்கி இருக்காங்க. ஆனால் 2 கோடி தொண்டர்கள் இருக்காங்கன்னு சொன்னாங்க ஆனால்  இப்பொழுது 20% வீதம் கூட ஓட்டு வாங்கவில்லை என்றால் 80% தொண்டர்கள் காணாமல் போயிவிட்டார்களா? அதனால் கட்சி தொண்டர்களை அவர்கள் பார்க்க வேண்டும். சசிகலா இப்பொழுது சிறையில இருப்பதால் எந்த பொறுப்பும் இல்லை. வெளியில் வந்து முடிவுகள் எடுப்பார்.

 

ஒபிஎஸ் மகன் பாஜகவில் சேர்ந்து அமைச்சர் பதவி வாங்கப் போறதா தகவல் வருதே என்ற கேள்விக்கு..
 

அவர் என் நண்பர் தான் அப்படி அவர் போகமாட்டார். அதேபோல மத்தியில் தனி பெரும்பான்மை இருக்கிறதால யாருடைய ஆதரவும் அவங்களுக்கு வேண்டியதில்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்