Skip to main content

'இர்ஃபானை மன்னிக்க முடியாது'-அமைச்சர் மா.சு கண்டனம் 

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
'Irfan can't be forgiven'-Minister M. Su condemned

பிரபல யூடியூபர் இர்ஃபான் அண்மையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவும் இர்ஃபான் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக இளங்கோவன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த புகாரின் அடிப்படையில் இர்ஃபானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களைக் கைப்பற்றி செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'Irfan can't be forgiven'-Minister M. Su condemned

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'இந்த விவரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூட்யூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்