Skip to main content

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்... மருத்துவமனையில் அனுமதி!!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

தென்காசி மாவட்டத்தின் வி.கே.புதூரிலுள்ள அண்ணா மேல்நிலைப்பள்ளியான தனியார் மேனேஜ்மெண்ட் பள்ளியில் அக்கம் பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் இதே ஊரைச் சேர்ந்த முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் வீராணத்தைச் சேர்ந்த செரீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் ப்ளஸ் 2 படித்து வருகின்றனர். இருவரும் இணைபிரியா நண்பர்கள். அன்னோன்யமாகப் பழகிய இவர்களின் நட்பு முருகன் வீட்டில் செரீப் உணவு சாப்பிடுவதும், செரீப் வீட்டில் முருகன் சாப்பிடும் அளவுக்கு சினேகம் விரிவடைந்திருக்கிறது.

 

INCIDENT IN THENKASI...

 

இந்நிலையில் நண்பர்களுக்குள் கடந்த சில நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்திருக்கிறதாம். இந்தச் சூழலில் நேற்றைய தினம், செரீப் திடீரென்று முருகன் முகத்தில் குத்த, மூக்கில் அடிப்பட்டிருக்கிறது. இதையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் இருவரையும் கண்டித்து அனுப்பியிருக்கிறார். மேலும் இவர்களுக்குள் மோதல் வலுத்திருக்கிறது.

இதனிடையே இன்று காலை 10 மணியளவில் பேருந்து நிலையம் வந்த முருகன், செரீப்பை  எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறான். வழக்கம்போல முதல் பேருந்தில் வராத செரீப் அடுத்த பேருந்தில் வரும் வரை அங்கேயே இருந்திருக்கிறான். அப்போது செரீப் பேருந்தில் வந்திறங்கியிருக்கிறான். அது சமயம் திடீரென அருகிலுள்ள சலூன் கடையிலுள்ள சவரக்கத்தியை எடுத்து வந்த முருகன், பள்ளிக்குச் செல்லவிருந்த செரீப்பின் கையிலும் கழுத்துப் பக்கத்திலும் குத்தியிருக்கிறாம். காயம்பட்டு அலறியவனை மீட்டு தென்காசி அருசு மருத்துவமனைக்குச் சிகிச்சையின் பொருட்டு அனுப்பியுள்ள வி.கே.புதூர் போலீசார் வேறு எதுவும் இவர்களுக்குள் பிரச்சினை உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

INCIDENT IN THENKASI...

 

இதனிடையே முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பிரச்சினை காரணமாக இந்தக் கத்திக் குத்துச் சம்பவத்தில் முருகனுக்கு வெளியாட்கள் இருவர் உதவியதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் அந்த ஏரியாவைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.