
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள கொல்லிமலை கீழ் பாதி என்ற கிராமத்தில் ஜெ.என்.நகரைச் சேர்ந்தவர் முகம்மது அப்சர் (35). இவர் புதிய வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் போது சுமார் 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, சிதாலமான திருவாச்சி, அஸ்தி தேவர், 1 அடி பிரதோஷ நந்தி வாகனம் உள்ளிட்ட ஐம்பொன் உலோகங்களால் ஆன சிலை கண்டெடுக்கப்பட்டபட்டது.
தகவலில் பேரில் அங்கு வந்த காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் சிலைகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்புடன் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வேறு சிலைகள் ஏதாவது இருக்குமா? என தோண்டும் பணியினை அதிகாரிகள் தீவிரப்படுத்தப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரவி பொதுமக்கள் ஏராளமானோர் சிலைளை காண குவிந்தனர்.