Skip to main content

“அவர் குறித்து பேசினால் அதுதான் தலைப்புச் செய்தியாக வரும்..” -சீமான் விஷயத்தில் சரத்குமார் நழுவல்!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

சிவகாசியில் தனியார் உடற்பயிற்சி நிலையத்தை இன்று தொடங்கி வைத்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர் சந்திப்பில்  “உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்ற அடிப்படையில்தான் இங்கே வந்திருக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, நடப்பு அரசியல் குறித்து பேசினார்.

 

"If  i talks about he, that's the headline." Sarathkumar in the case of Seeman!


“அதிமுக ஒருங்கிணைப்பாளர்  மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரிடம் பேசி எங்களுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருக்கிறோம்.  இதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் பேசியிருக்கிறோம். எங்கள் கட்சியில் துணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் கட்சியில் நிறையபேர் சீட் கேட்டிருக்காங்க. எல்லாருக்கும் கொடுக்க முடியாது. ஏற்கனவே அதிமுக அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது இதே பதிலைத்தான் சொன்னேன். என்னுடைய சகோதரர்கள் நிறைய பேர் நிற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே சீட் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எவ்வளவு சீட் கேட்டிருக்கிறோம். எவ்வளவு சீட் கொடுக்கிறோம் என்று இங்கே சொல்ல விருப்பப்படவில்லை. கூட்டணிக்குள் பிரச்சனை இருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டிருக்கிறார். மற்ற கட்சிகள் இட ஒதுக்கீடு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அதிமுகவால்தான் சொல்ல முடியும்.

 

"If  i talks about he, that's the headline." Sarathkumar in the case of Seeman!


உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக பத்திரிகைகளில் படித்தேன். கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய். இதுகுறித்து எங்களுக்குத் தெரியாது. பத்திரிகைகளில்தான் செய்தி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டுமென்று அவங்க (திமுக) சொல்லுறாங்கல்ல.  அப்படியென்றால்,  அவர்களுக்கு பய உணர்வு வந்துவிட்டதென்று நினைக்கிறேன்.  

நான் எல்லாரும் அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் சொல்லிவருகிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நீங்களே (பத்திரிகையாளர்கள்) வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கேள்வி (சீமான் குறித்து) கேட்டீங்கன்னா.. நான் அவர் குறித்து பேசினால்..  இதுதான் நாளைக்கு ஹெட்லைனாக வரும். மற்றவர்களுக்கு நான் ஒரு ஒலிபெருக்கியாக இருக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்காகவும், சமூகத்துக்காகவும்தான் ஏதாவது சொல்ல விரும்புகிறேன். நடிகர்கள் மட்டுமல்ல. எல்லாரும் அரசியலுக்கு வரவேண்டுமென்று சொன்னவன் நான். கட்சி தொடங்கி 12 வருடங்கள் ஆகிவிட்டது. 13-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்துக்கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அனைவரும் வரவேண்டும் என்று சொல்லும்போது நடிகர்கள் வரக்கூடாது என்று சொல்லமுடியாது. ஆனால், அவர் (சீமான்) சுட்டிக்காட்டியிருப்பது எந்த நேரத்தில் வருகிறார்கள் என்பதைத்தான். தன்னிடம் ஆதரவு கேட்டவர்கள் யாரென்று ரஜினியைச் சொல்லச் சொல்லுங்கள்.

குடியுரிமைச்சட்டத்தைப் பொறுத்தவரை, அதில் சில மாற்றங்கள் செய்யலாம். அந்த மாற்றங்கள் என்னவென்பதை நாளை அறிக்கையாகக் கொடுக்கவிருக்கிறேன்.” என்றார்.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.