Skip to main content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா! - சிபிஐ விசாரணை கோரிய திமுக வழக்கில் பதிலளிக்க உத்தரவு!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

ஆர்.கே.நகர்  தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Highcourt orders tamilnadu government to answer on dmk petition

 



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில்,  89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டன.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் திமுகவை வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு,   நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும்,  காவல்துறை டிஜிபியும்,  அபிராமபுரம் காவல் நிலையமும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 12-ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்