திருக்குறள் வழியாக மக்களை நெறிப்படுத்தவும், திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை நிலைநாட்டவும் தமிழ்நாடு திருவள்ளுவர் மன்றம் சார்பில் 'குறள் நெறி செல்வர்' வேதை அருணன் தலைமையில் ஊர்தி பரப்புரை தமிழகமெங்கும் புறப்பட்டிருக்கிறது. இன்று தோப்புத்துறை வந்த அக்குழு மஜக பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரியை சந்தித்து வாழ்த்து பெற்றது.

 mjk-thamimun ansari

Advertisment

அவர்களிடம் பேசிய மு.தமிமுன் அன்சாரி, "திருவள்ளவர் மொழி, இன, மத, சாதி வட்டத்திற்குள் அடங்காத ஆளுமை. அவரை சிலர் சமண துறவி என்கிறார்கள். சிலர் அவரை காவிக்குள் அடைக்க முயல்கிறார்கள். இந்த ஆபத்தான கால கட்டத்தில் அவரை பொதுவானவர் என்று வலியுறுத்தியும், திருக்குறள் வழியில் நெறிமிக்க ஒரு சமூகத்தை கட்டமைக்கும் பணியிலும் நீங்கள் எடுக்கும் முயற்சியை பாராட்டுகிறேன். இந்த ஊர்தி பரப்புரைக்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவளிக்கும். மேலும் உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.