'It is an honor for Vijay to congratulate EPS' -Sellur Raju interview

அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளிற்காக பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் பேசுகையில், ''நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ரொம்ப சந்தோஷம் என பலமுறை சொல்லி இருக்கிறோம். விஜய் பொதுவாகவே நன்று செயல்படக் கூடியவர். எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உதவிகளை செய்கிறார். யார் வாழ்த்தினாலும் அதை பெற தகுதி உடையவர் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது என்பது அவருக்கும் (விஜய்க்கு) பெருமை எங்களுக்கும் பெருமை. வாழ்த்து சொல்பவர்களுக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை.

Advertisment

தமிழகத்தில் வாழ்த்து சொல்வது என்பது ஒரு பண்பு. அந்த வகையில் எந்த அரசியல் தலைவர்களும்வாழ்த்து சொல்லும் அளவிற்கு தகுதி படைத்தவர் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்து உயர் பதவியில் வந்தாலும் கூட அனைத்து மக்களின் அன்புக்குரிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வாழ்த்துச் சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான்''என்றார்.