அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் என்.சத்தியநாராயணன் மற்றும் பி.புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆஜராகி, ‘விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது’ என்று தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள் அமர்வு ‘மேல் நடவடிக்கையைக் கைவிட்டதற்கான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லையே? சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கு குறித்து அரசியல் வட்டாரத்தில் “உயர் நீதிமன்றத்தில் தகுந்த காரணங்களை விளக்கினாலே போதுமானது. இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருத நேரிடுகிறது.” என்கிறார்கள்.