Skip to main content

அதிவேகமாக பறக்கும் லாரிகள்... அரியலூர் மக்களின் திக் திக் நிமிடங்கள்...!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

அரியலூர் மாவட்டத்தில் வாகன விபத்து ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. காரணம் இங்கு உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள், ஆலையிலிருந்து சிமெண்ட் மூட்டை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் என தினசரி பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் பறக்கின்றன.

 

High speed trucks in Ariyalur

 



அதன்மூலம் சமீபத்தில் அரியலூர் அருகே பள்ளி மாணவர்களின் வேன் மீது லாரி மோதி அதில் பயணம் செய்த ஆசிரியை மாணவர் மரணமடைந்தனர். ஓட்ட கோவில் அருகே அரசு டவுன் பஸ் மீது லாரி மோதி 15க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டனர். இப்படி தினசரி ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக நேற்று மாலை அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் சிமெண்ட் ஆலை லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரி டிரைவர் மனோகர் கல்லூரி பஸ் டிரைவர் அரவிந்த் ஆகியோர் மிகவும் சீரியஸான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

 



கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 26 கல்லூரி மாணவ மாணவிகள் இதில் அடிபட்டு பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபோன்று தினசரி சம்பவம் நடப்பதால் அரியலூர் மாவட்ட ஆட்சியராக வருபவர்கள் அவ்வப்போது விதிமுறைகளை அறிவித்தும் கூட சிமெண்ட் ஆலை லாரிகள் அதை கடைபிடிப்பதில்லை. 

பலமுறை சிமெண்டு ஆலை அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கொண்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிமெண்ட் ஆலை அதிகாரிகள் காலை மாலை இரு வேளைகளிலும் பள்ளி கல்லூரி நேரம் முடிந்து பிள்ளைகள் வாகனங்களில் செல்லும் அந்த நேரங்களில் லாரிகளை இயக்க கூடாது என முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த சரவணவேல்ராஜ் கடுமையாக உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, சிமெண்டு ஆலை லாரிகள் மிக அதிவேகமாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்கிறார்கள் அரியலூர் மாவட்ட மக்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்