Skip to main content

எச்.ராஜா கைது?. முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி.. விராலிமலையில் தம்பித்துரை பேட்டி

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
thambidurai

 

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக மக்களை சந்தித்து குறைகள் கேட்பு மனுக்கள் பெற்று வருகிறார்கள் அமைச்சர் விஜயபாஸ்கரும் கரூர் தொகுதி எம்பி, மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையும். இன்று  தெற்கு எருதுப்பட்டி, மலைக்குடிப்பட்டி, இச்சக்குடி, எருதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில்  மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். தெற்கு எருதுபட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை.. 
 

நான் பாஜகவை விமர்சிப்பது எனது சொந்த கருத்து தான். மக்களவை துணை சபாநாயகராக இருப்பதால் எனது கருத்தை நான் கூறி வருகிறேன். அதிமுகவிற்கு, பாஜக கதவை சாத்திவிட்டது என்று தினகரன் கூறியிருப்பது தவறு. நாங்கள் பாஜக கூட்டணியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கூட்டணி என்பது வேறு, நட்பு என்பது வேறு. நாங்கள் நட்புடன் இருக்கிறோம்.  மேலும்  நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்கட்சியாகத்தான்  செயல்படுகிறது. பாஜக கதவைத் திறக்கும் என கூட்டணி வைக்க முயற்சித்துக் கொண்டிருப்பது திமுக தான்.
 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, சட்டச்சிக்கல் ஏதும் இல்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகிறேன்.
 

எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு.. முதலமைச்சரிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் என்ன சொல்வது என்று பதில் சொல்லாமல் நலுவினார்.


மேலும் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இல்லை என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் பெறவும், தேவையான நிலக்கரியை வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ 17 ஆயிரம் கோடிக்காக காத்திருக்கிறோம். என்று கூறினார் 

 

 

 

 

சார்ந்த செய்திகள்