Skip to main content

'குரு பூஜை' தங்கக் கவசம் யாருக்குச் சொந்தம்...? - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

பரக

 

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் கோவிலில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க தங்கக் கவசம் ஒன்றை வழங்கியிருந்தார். தேவர் ஜெயந்தி தினங்களில் மட்டும் அந்த தங்கக் கவசமானது தேவர் சிலைக்கு சாற்றப்படும். மற்ற நேரம் அவை மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்படும். இந்நிலையில் தற்பொழுது அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து தேவர் சிலைக்கு சாற்ற யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல் அதிமுகவில் உருவெடுத்துள்ளது.

 

இரு தரப்பினரும் மாறி மாறி அதற்கான உரிமையைக் கோரி வந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று மூன்று மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிறிது தாமதத்திற்குப் பிறகு தற்போது தீர்ப்பானது வெளியாகியுள்ளது. இந்நிலையில், தங்கக் கவசத்தை ஓபிஎஸ்,ஈபிஎஸ் உள்ளிட்ட யாருக்கும் வழங்காமல் வருவாய்த் துறையினரிடம் வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு அதிமுகவைச் சார்ந்த எந்த அணியும் தங்கக் கவசத்தைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்