Skip to main content

நடந்தே வந்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி வழங்க வேண்டும்.  - கொ.ம.தே.க. ஈஸ்வரன் அரசுக்கு வேண்டுகோள்

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

கொங்கு நாடு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E .R .ஈஸ்வரன் இன்று நம்மிடம்,
"ஊரடங்கு உத்தரவினால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சொந்த ஊரை நோக்கி நடந்து வந்த நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், ஆவத்திப்பாளையத்தை சேர்ந்த மாணவன் லோகேஷ் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்." என்ற அவர் மேலும் கூறும்போது,

 

The government has to give a crore to the families of the youth who have  kmk Request to the Iswaran Government


"கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினால் அனைத்து போக்குவரத்தும் முடங்கி,  வெளிமாநிலங்களுக்கு  கல்விக்காகவும், வேலைக்காவும் சென்றிருந்தவர்கள் இன்னும் முழுமையாக சொந்த ஊருக்கு திரும்பவில்லை. கரோனா நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் வெளிமாநிலங்களில் தங்கியிருந்து அச்ச உணர்வுடனும், உண்ண உணவு இல்லாமலும்  தவிப்பதற்கு பதிலாக சொந்த ஊருக்கு நடந்தே செல்லலாம் என்று முடிவு எடுத்து மாணவர்களும், தொழிலாளர்களும் புறப்பட்ட செய்திகளை நாம் அறிவோம். அப்படி நாக்பூரில் இருந்து நாமக்கல்லுக்கு நடந்தே  புறப்பட்ட மாணவன் லோகேஷ் உடல்நலக்குறைவினால் உயிரிழந்திருக்கிறார்.


சொந்த ஊருக்கு போக முடியவில்லை என்ற மன அழுத்தமே இதற்கு முக்கிய காரணம். ஊரடங்கினால் வெளிமாநிலங்களில் சிக்கி கொண்டவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு அந்தந்த மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வெளிமாநிலங்களில் இருப்பவர்களை அவரவர் ஊருக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசு செய்ய வேண்டும். தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். ஊரடங்கில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஏற்பட்ட சிரமத்தினால் உயிரிழந்த லோகேஷ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்