Skip to main content

இளைஞரை எரித்துக் கொன்று உடலைப் புதைத்த நண்பர்கள்; போலீசார் தீவிர விசாரணை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Friends who burnt the youth to incident in thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சோழவரம் அய்யாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (24) என்பது தெரியவந்தது. 

மேலும், கோகுல் அந்தப் பகுதியில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 12ஆம் தேதி இரவு நேரத்தில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் கடைக்கு வரவில்லை. இது குறித்து அவரது வீட்டிற்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கோகுலின் நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நகைக்காக கோகுலை எரித்துக் கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

50 மீட்டர் தரதரவென இழுத்துச் சென்ற எருமை; பொதுமக்களே மீண்டும் உஷார்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
50 meter standard drawn buffalo; Public beware again

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பெண்ணை மீட்க வந்தவர்களையும் அந்த எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே சென்னையில் வளர்ப்பு நாயால் ஒரு சிறுமி கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது எருமை மாடு முட்டி பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பட்டப்பகலில் கத்திக்குத்து; ரத்த வெள்ளத்தில் அலறிய பெண் காவலர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
stabbing in broad daylight; The female guard screamed in blood

காஞ்சிபுரத்தில் சீருடையிலிருந்த பெண் காவலரை, அவரின் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். அங்கு பணியாற்றி வரும் பெண் காவலரான டெல்லி ராணி வழக்கமாக இன்று பணியை முடித்துவிட்டு உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி அருகே அவருடைய கணவர்  வழிமறித்து டில்லி ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டில்லி ராணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் அலறியடித்த டெல்லி ராணி இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டு தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலர் டெல்லி ராணியை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீருடையிலிருந்த பெண் காவலர் கணவராலே கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் கணவன் மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.