That happened to the young woman who went looking for a person she met on Instagram!

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் ஆன்லைனில் நண்பர்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையில், அந்த நபர் தான் ஒரு வங்கியில் பணியாற்றுகிறேன் என்றும் அந்த இளம்பெண்ணுக்கு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என்றும் கூறி உதவ முன்வந்துள்ளார்.

Advertisment

அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தின் தனபவன் பகுதிக்கு நேரில் வந்து சந்தித்தால் தான் வேலை வாங்கி தர முடியும் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பகுதிக்கு இளம்பெண் சென்று அந்த நபரைச் சந்தித்துபேசியுள்ளார். அதன் பின்னர், அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து குளிர்பானம் ஒன்றைக் குடிக்க வைத்திருக்கிறார்.

Advertisment

இதனையடுத்து, அந்த பெண்ணை ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அழைத்து சென்று அந்த நபரும் மற்றும் அவருடைய நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் பழகிய நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.