Skip to main content

தேர்வு மையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு!

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
Examination Center



அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்காவில் உள்ளது முள்ளுக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வுகளை பல வருடங்களாக குறிச்சிகுளம் பள்ளிக்கு சென்று எழுதி வந்தனர். தற்போது ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான தனியார் பள்ளியில் தேர்வு மையத்தை மாற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்களும், அரசு பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களை அதே அரசுப் பள்ளியிலேயே தேர்வு எழுத வையுங்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளியின் சூழ்நிலைகள் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். மேலும்  தேர்ச்சி விகிதம் குறைந்து அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கபடும் என்றனர். 

 

 



 

சார்ந்த செய்திகள்