Skip to main content

ஆண்டவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான் - அமைச்சர் ஜெயக்குமார்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

சென்னை அடையாறில், இன்று தனியார் அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள  புற்றுநோயாளிகளுக்கான இலவச தங்கும் விடுதியை திறந்து வைக்கும்  நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

 

jayakumar


ஆளுநர் வேந்தர் என்ற முறையில் விசாரணை குழுவை  அமைத்துள்ளார்.  இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது, எனவே இந்த வழக்கை சிபிசிஐடி முழுமையாக விசாரிக்கும். சம்மந்தப்பட்ட பேராசிரியரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியில் யாருடைய தொடர்பு எண்கள் எல்லாம் உள்ளதோ அனைவரிடமும் விசாரிக்கப்படும், அப்படி விசாரிக்கப்படும்போது யாராக இருந்தாலும் பதில் சொல்லதான் வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி. ஏன் இவர், அவர்   என்று  நான் குறிப்பிட்ட வேண்டும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அது ஆண்டவனாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் எனக்கூறினார். 

சார்ந்த செய்திகள்