Father incident his daughter near Nellai

நெல்லை மாவட்டம்பாளையங்கோட்டை அருகே வாசிப்பவர் கொம்பையா. இவருக்கும்கொங்கந்தான்பாறை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகள் முத்துபேச்சிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து கணவன் கொம்பையாவுக்கும் மனைவி முத்துபேச்சிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் முத்துபேச்சி கணவருடன் சண்டைபோட்டுக்கொண்டு இரு மகன்களுடன்தந்தை மாரியப்பனின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு மகன்களுடன் தந்தைமாரியப்பன் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் தந்தை வீட்டில் வசித்து வரும் முத்து பேச்சுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் திருமணத்தை மீறி உறவாக மாறி உள்ளது. இந்த விவகாரம் குறித்து தந்தை மாரியப்பனுக்கு தெரிய வர, அவர் தனது மகள் முத்துப்பேச்சியைஅழைத்து கண்டித்துள்ளார். ஆனால் முத்துப்பேச்சிஉறவைத்தொடர்ந்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முத்து பேச்சியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்ற மாரியப்பன் காட்டுப் பகுதியில் திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகளை வெட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதனால் பதறிப் போன முத்துபேச்சி, அங்கிருந்து தப்பித்துஓடியுள்ளார். ஆனால் பின்னாடியே விரட்டிசென்று ஓட ஓட விரட்டி மகள் முத்துபேச்சியை வெட்டி படுகொலை செய்துள்ளார். மாரியப்பன் வெட்டியதில் முத்துபேச்சியின் தலை துண்டானதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முத்துபேச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே நின்றுகொண்டிருந்த மாரியப்பனை பிடித்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Advertisment