Skip to main content

கருவறை இருட்டிலிருந்து சாகத்தான் பூமிக்கு வந்ததா அந்த பிஞ்சு...? –பதைபதைப்பு...

Published on 30/01/2020 | Edited on 31/01/2020

 

தாயின் இருட்டு கருவறையிலிருந்து வெளியே வந்து இந்த பூமியை தொட்ட சில நிமிடங்களிலேயே சுவாசம் நிறுத்தப்பட்டு கொலையாவோம் என்று அந்த சிசுவுக்கு எப்படித் தெரியும்?
 

நெஞ்சம் பதைபதைக்கும் அந்த சம்பவம் இதோ...
 

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் மெயின் வீதியில் உள்ள ஒரு கழிவுநீர் சாக்கடையை இன்று காலை மாநகராட்சி துப்புரவு பணியாளர் செல்வராஜ் என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவர் கண்ட காட்சி பேரதிர்ச்சியாக இருந்தது. ஆம், தொப்புள் கொடியுடன் கூடிய ஒரு ஆண் சிசு சடலமாக அந்த சாக்கடையில் இருந்தது.

 

erode




இந்த  தகவல் அந்த பகுதி முழுக்க தீ போல் பரவியது. அந்த கழிவுநீர் கால்வாய் முன்பு நூற்றுக்கனக்காண மக்கள் திரண்டனர். பல பெண்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சிசுவின் சடலத்தை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 

கழிவு நீர் கால்வாய்க்குள் ஆண் சிசுவின் சடலம் எப்படி வந்தது? யார் கொலை செய்து கொண்டு வந்து போட்டார்கள் என தெரியவில்லை. அந்த சிசு தொப்புள் கொடியுடன் இருப்பதால் அது பிறந்து சில மணி நேரத்திலேயே கொல்லப்பட்டு கழிவுநீர் கால்வாய்க்குள் வீசப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள்.
 

குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசிச் சென்ற அந்த கல் நெஞ்சம் படைத்த மனதிற்கு சொந்தக்காரர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கி வருகிறார்கள்.
 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


 

காதல்... காமமாகி பிறகு அது எல்லை மீறிப் போய் முறையற்ற உறவுகளால் கர்ப்பமடைந்து அது வீட்டுக்கோ அல்லது வெளியிலோ தெரிந்தால் அவமானம் என இப்படி பிறந்த சில நிமிடங்களிலேயே கொன்றுவிட்டு வீசி செல்வது கொடுமையானது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் கல்லூரிகள் ஏராளமாக உள்ளது. இங்கு சில மாணவிகள் காதலுக்கு அடிமையாகி இப்படிப்பட்ட முறையற்ற உறவுகளால் கற்பமடைந்து வேறு வழியில்லாமல் கர்ப்பத்தை கலைக்க முடியாமல் இதுபோன்ற சம்பவத்திலும் ஈடுபடுவதாக சமூக நல அமைப்பினர் கூறுகிறார்கள். 
 

 

இது மட்டுமில்லாமல் கள்ளத்தொடர்பால் கர்ப்பிணி ஆகி இதுபோன்று சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். சில மருத்துவமனைகளும் இப்படியான சூழலில் குழந்தை பெறுபவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ தாயின் கருவறை இருட்டிலிருந்து இந்த உலகை பார்த்த சில நிமிடங்களிலேயே மீண்டும் இருட்டுக்குள் மறைந்து போவது கொடூரத்தின் உச்சம்.

 

 

சார்ந்த செய்திகள்