தமிழகத்திற்கு புயல் நிவாரண பொருட்களை அனுப்ப ரயில்வே துறை விலக்கு அளிக்கவேண்டும் என்று எடப்பாடி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தினால் டெல்டா மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்கள், வீடுகள் மற்றும் படகுகள், மின்சார கம்பங்கள் போன்றவை சேதமடைந்து பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சாலை மறியல் செய்யும் அளவிற்கு புயலின் பாதிப்பு வளர்ந்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரண பணிகளை முடுக்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு நாடு முழுவதிலுமிருந்து நிவாரண பொருட்கள் வருகிறது எனவே ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரண பொருள்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார்.