Youth arrested for dissolving drug in water tank

Advertisment

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது புலிவந்தி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், இவரது மகன் பாலமுருகன். இவர் அந்த ஊரில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பேதி மருந்து கலந்துள்ளதாக ஊர் மக்களுக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தமிழ்வாணன் விசாரணை செய்து, அதன் பிறகு அனந்தபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் பாலமுருகனை கைது செய்துள்ளார்.

மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்று தனது வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு கொடுக்காத ஆத்திரத்தில் தண்ணீர் தொட்டியில் பேதி மருந்து கலந்ததாக பாலமுருகன் ஒப்புக்கொண்டுள்ளார். பொதுமக்கள் குடிக்கும் மேல்நிலை தேக்க தண்ணீர் தொட்டியில் பேதி மருந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதனால் பாலமுருகனைகைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்