Skip to main content

'ஜூன் 15- ஆம் தேதி முதல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு'- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

education minister sengottaiyan press meet


சென்னை தலைமைச் செயலகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். 
 


ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஜூன் 1- ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மே 31- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. ஜூன் 15- ஆம் தேதி வரை ஜூன் 25- ஆம் தேதி வரை 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தமிழகம் முழுவதும் 15,690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மார்ச்- 24 ஆம் தேதி நடைபெற்ற 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு ஜூன் 18- ஆம் தேதி மறு தேர்வு நடக்கிறது" என்றார். 

அதனைத் தொடர்ந்து 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு காலையில் நடக்கிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்
ஜூன் 17-ம் தேதி ஆங்கிலப்பாடம்
ஜூன் 19-ம் தேதி கணிதம்
ஜூன் 20-ம் தேதி மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
ஜூன் 22-ம் தேதி அறிவியல்
ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்
ஜூன் 25-ம் தேதி தொழில்கல்வி தேர்வு



மேலும் 11- ஆம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16- ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 16- ஆம் தேதி 11- ஆம் வகுப்பு வேதியியல், புவியியல், கணிக்கியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


அதேபோல் ஜூன் 18- ஆம் தேதி 12- ஆம் வகுப்புக்கு வேதியியல், புவியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
10th class general exam has started

பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்வு 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாகத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.