Skip to main content

"முகக்கவசம் அணியாதவர்களிடம் தயக்கமின்றி அபாரதம் வசூல் செய்க"- மருத்துவத்துறைச் செயலாளர் அறிவுறுத்தல்!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

"Do not hesitate to collect fines from those who do not wear a mask" - Medical Secretary Instruction!

 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாடு மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (03/01/2022) அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்தக் கடிதத்தில், "முகக்கவசம் போடாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் காட்ட தேவையில்லை. முகக்கவசம் போடாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே அபராதம் வசூல் என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், மருத்துவ வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்