Skip to main content

அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட திமுக ஒன்றிய செயலாளரின் மகன் கைது

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
DMK union secretary son who released reels at Anganwadi center arrested

வேலூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த திமுகவின் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மற்றும் வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரனின் மகன் சரண் என்பவர் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் பார் போல் செட் அமைத்து மலையாள படக் காட்சியை ரீகிரியேசன் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இது சர்ச்சையான நிலையில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக  அரசு கட்டிடத்தில் அத்துமீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் திமுக பிரமுகரின் மகன் சரண் உட்பட 3 பேரைக் கைது செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர், விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் அனுப்பினர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவரை முதல்வர் அங்கு போவாதது ஏன்?' - தமிழிசை கேள்வி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'Why hasn't the Chief Minister gone there yet?'-Tamizhisai question

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழக ஆளுநரை தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் இன்று சந்தித்தோம். சில கோரிக்கைகளை வைத்தோம். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த விஷச்சாராயத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு அதை இட்டுச் செல்கின்ற முறையும் சரியாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசைக் தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.

அதேபோல் அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலபேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் இன்னும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் அனுப்பப்பட்டுள்ளார்கள். எந்த மருத்துவமனையில் யார் சிகிச்சை பெறுவது என்பதில் கூட குழப்பம் நிலவி இருக்கிறது. புதன்கிழமை தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாது அடுத்த நாள் கலெக்டரோடு திமுகவை சேர்ந்த எம்எல்ஏவும் உட்கார்ந்து இதை மறைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு அமர்ந்து பொய் சொன்ன எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்தத் துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு தமிழகத்தில் உள்ள மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.  ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம், ஒரு பிரச்சனை மாநிலத்தில் நடந்தது என்றால் அதைக் கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது அவர்களை போராடக்கூட  அனுமதிக்கவில்லை'' என்றார்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
incident in broad daylight; There is excitement in Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றி வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டீக்கடையில் மேகலா என்ற பெண் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேகலா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக மணிகண்டனை பிடித்த அக்கம்பக்கத்தினர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

incident in broad daylight; There is excitement in Paramakudi

இது தொடர்பான விசாரணையில் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த மேகலா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மேகலாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேகலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருதரப்பையும் அழைத்த போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த மேகலாவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.