Skip to main content

நான் ஏன் போகணும்... இந்த சின்ன வயசுல ந.செ.பதவியா? திமுக பிரமுகரின் செயலால் பதறிப் போன மனைவி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

இப்போதைய திருப்பத்தூர் மாவட்டம் -வாணியம்பாடி தி.மு.க. ந.செ.வாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் சிவாஜிகணேசன். சாலை விபத்தொன்றில் சிவாஜிகணேசன் திடீர் மரணம் அடைந்ததால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த அவரது மகன் சாரதிகுமாரை ந.செ.வாக்கியது தி.மு.க. தலைமை. "இந்த சின்ன வயசுல ந.செ. பதவியா?' என அப்போதே மாவட்ட உ.பி.க் களிடையே முணுமுணுப்பு கிளம்பியது.

இப்போது சாரதிகுமாரின் மனைவியே, தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்து சலசலப்பைக் கிளப்பியுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் சாரதிகுமார் மீது புகார் கொடுத்துவிட்டு வந்த ரம்யாவை நாம் நேரில் சந்தித்தபோது கண்ணீருடன் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

 

dmk



"எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றாலும் வாணியம்பாடியில் இருக்கும் எனது பாட்டி வீட்டில் தங்கி படிச்சுக்கிட்டிருந்தேன். நான் 7-ஆவது படிக்கும்போதிருந்தே என்னையே சுத்தி வருவார் சாரதி. 11-ஆவது படிக்கும்போது அவரோட காதலை ஏத்துக்கிட்டேன். மேல்படிப்புக் காக சேலத்தில் உள்ள கல்லூரியில சேர்த்துவிட்டு, அங்கே சத்யப்ரியா என்பவரின் வீட்டுமாடியில் தங்க வைத்தார். சாரதியைவிட 15 வயது மூத்தவரான சத்யப்ரியாவுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு.

காலேஜ் படிப்பு முடிஞ்சதும் 2016-ல் கல்யாணம் செய்து கொண்டோம். திருமணத்தை சத்யப்ரியாதான் முன்னின்று நடத்தினார். அதையாவது ஏத்துக்கலாம்... நாங்க ஹனிமூனுக்கு போனப்ப கூடவே வந்தத எப்படிங்க ஏத்துக்க முடியும்? ஒருமுறை ஏலகிரிக்குப் போனப்பவும் சத்யப்ரியாவைக் கூட்டிக்கிட்டு வந்தாரு சாரதி குமார். அவர்கள் ரெண்டு பேரும் கைகோர்த்துக் கிட்டு, பப்ளிக் பிளேஸ்ல கிஸ் அடிச்சுக்கிட்டுன்னு கண்றாவியா இருந்துச்சு. பொறுமை இழந்த நான் எரிச்சலாகி, சத்யப்ரியாவுடன் சண்டை போட்டேன். எங்க மாமனார் இறந்ததும் எங்க வீட்லயே வந்து டேரா போட்டார் ப்ரியா. என்னோட புருஷனும் அவரும் சேர்ந்து தண்ணி அடிச்சுட்டு கூத்துப் பண்ற கொடுமையெல்லாம் நடந்துச்சு. இதெல்லாம் பத்தாதுன்னு கோயம்புத்தூர்ல படிச்சிக்கிட்டிருக்கும் தன்னோட அக்கா மகள் ஆர்த்தியை சாரதிக்கு அறிமுகப்படுத்தி வச்சிருக்கா சத்யப்ரியா. அவர்கள் நடத்திய கூத்துகள் எல்லாமே ப்ரியாவின் செல்போனில் ரெக்கார்ட் ஆகியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, சாரதியிடம் கேட்டப்ப அடிக்க ஆரம்பிச்சார்.

 

incident



நான் கன்சீவா இருந்தப்பவும் அவரோட டார்ச்சர் தாங்க முடியல. என்னோட 140 பவுன் நகைகளை வித்து ப்ரியாவிடம் கொடுத்தார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததும் ஒரு முறை கோயம்புத்தூர் போனோம். அங்க ஜி.ஆர்.டி. ஓட்டலில் இரண்டு ரூம் புக் பண்ணினவர், என்னையும் குழந்தையையும் ஒரு ரூமில் விட்டுவிட்டு, இன்னொரு ரூமில் ப்ரியாவுடனும் ஆர்த்தியுடனும் தங்கிட்டாரு என் புருஷன்.

சரி, சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழுவோம்னு முடிவு பண்ணி, என் புருஷனை விட்ருன்னு ப்ரியாவிடம் கெஞ்சினேன். "நான் ஏன் போகணும், நீ அவரை டைவர்ஸ் பண்ணிட்டுப் போ... இல்லேன்னா தற்கொலை பண்ணிக்கோ'ன்னு தெனாவெட்டா பேசுனா. சென்னையில் போலீஸ் எஸ்.பி.யாக இருக்கும் ப்ரியாவின் அண்ணனிடமும் சொல்லி அழுதேன். "நானும் சொல்லிப் பார்த்துட்டேன், அவ திருந்துற மாதிரி தெரியல, அவள வீட்டைவிட்டு ஒதுக்கி வச்சுட்டோம், அதனால உன்னோட வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிக்கம்மா'ன்னு கை விரிச் சுட்டாரு.


மறுபடியும் அடி-உதை டார்ச்சர் அதிகமானதும் தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். பயந்துபோன அவர் ஆஸ்பிடலில் சேர்த்து காப்பாத்துனாரு. அதுக்கப்புறம் குழந்தையுடன் என் வீட்டிற்கு வந்துட்டேன். இங்கும் வந்து என்னை மிரட்ட ஆரம்பிச்சார். காஞ்சிபுரம் போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு, அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரிடமும் சாரதி பண்ணிய அட்டூழியங்களைச் சொன்னேன். "விசாரிச்சு நடவடிக்கை எடுக்குறேன்'னு வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். சென்னையில் தங்கி ஒரு கோர்ஸ் படிச்சிக்கிட்டிருக்கும்போது மிரட்டியதால்தான் கமிஷனரிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணினேன்'' என கதறி அழுதார் ரம்யா.


நாம் சாரதிகுமாரிடம், ரம்யா விவகாரம் குறித்துக் கேட்டபோது, ஒரு நில விவகாரத்தில் என்னை தலையிடச் சொன்னார் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி. அதை நான் முடித்துத் தராத கோபத்தில்தான் ரம்யாவை தூண்டிவிடுகிறார். எங்க கட்சியின் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவகுமாரும் இதன் பின்னணியில் இருக்கார். நானும் ப்ரியாவும் கட்டிப்பிடித்த மாதிரி போட்டோ எடுத்ததே ரம்யாதான்'' என்கிறார்.

சாரதிகுமாரின் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அமைச்சரும் தி.மு.க. வி.ஐ.பி.யுமான இந்திரகுமாரியிடம் நாம் பேசியபோது, என்னோட சகோதரி நிலம் சம்பந்தமான வழக்கு ஒன்றை திருப்பத்தூர் எஸ்.பி. விசாரித்து வருகிறார். அப்படி இருக்கும்போது சாரதிகுமாரின் உதவியை நான் ஏன் கேட்கவேண்டும்? அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. என் மீது குற்றம்சாட்டும் அந்த தம்பி மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை'' என்றார்.

இதற்கிடையே ந.செ.பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் வாங்கிவிட்டது தி.மு.க. தலைமை.


 

 

சார்ந்த செய்திகள்