Skip to main content

நீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

இளைஞர்கள் ஒரு பணியை செய்தால் நாங்களும் அவர்களுக்கு துணையாக களத்தில் நிற்போம் என்பதை செய்து காட்டியுள்ளனர் கொத்தமங்கலம் கிராமத்து பெண்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் அதாளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்க்கும் நிலை உருவாகி வருகிறது. அதனால் நிலத்தடி நீரை சேமிக்க நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்க வேண்டும் என்று கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, மாங்காடு, வடகாடு, நகரம், மறமடக்கி, நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களில் இளைஞர்கள் முன்வந்து தங்களின் சொந்தச் செலவிலும் நன்கொடையாளர்களின் உதவியாளும் அணைக்கட்டு, ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து வருகின்றனர்.

 

 village women's who are Poured the water to grow the trees in pudukottai

 

இதேபோல தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக்கரம்பை உள்ளிட்ட பல கிராமங்களிலும் இளைஞர்களுடன் கைஃபா அமைப்பும் கைகோர்த்து நீர்நிலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழக அரசு செய்ய மறந்த பணிகளை செய்து வருகிறார்கள்.

அதே தஞ்சை மாவட்டத்தில் நாடியம் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முத்துமாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் போட்டி போட்டு நடத்தப்படும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை நீர்நிலை சீரமைப்பிற்கும், கிராம வளர்ச்சிக்கும் பயன்படுத்த கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணிகளையும் தொடங்கி அசத்திவிட்டனர். இந்த கிராமத்தில் இந்த தீர்மானம் பற்றிய செய்தியை நக்கீரன் இணையம் முதலில் வெளியிட்டதும் இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பற்றி பல கிராமங்களிலும் இதே தீர்மானம் போட வைத்தது. 

இப்படி ஒரு கிராமம் கேளிக்கைகளை தள்ளி வைத்துவிட்டு கிராம வளர்ச்சிக்கு கேளிக்கை செலவை பயன்படுத்துகிறது என்பதை செய்திகள் மூலம் அறிந்த கள்ளக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 600 மாணவர்கள், மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நாடியம் கிராம மக்களுக்கு கையெழுத்து போட்ட வாழ்த்து மடலை அனுப்பி பாராட்டி உள்ளனர்.   

இந்த நிலையில்தான் கொத்தமங்கலத்தில்  இளைஞர் மன்றத்தின் சார்பில் நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதை பார்த்து மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட ஆய்வுக்குழுவினர் நேரில் வந்து பாராட்டிச் சென்றனர். உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் பணிகள் தொடங்கி இன்று திங்கள் கிழமை 100  நாட்கள் ஆகிறது. 

 

 village women's who are Poured the water to grow the trees in pudukottai

 

இந்தநிலையில்தான் கொத்தமங்கலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்கள், கோயில் வளாகங்கள் என்று அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி செய்து வருகின்றனர். அவ்வப்பபோது நடப்படும் மரக்கன்றுகளுக்கு கூண்டு அமைத்து பாதுகாப்பதுடன் அனைத்து கன்றுகளுக்கும் தண்ணீர் எடுத்து வர வண்டிகளும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்களே இத்தனை பணிகளையும் செய்து வருவதைப் பார்த்த கிராம பெண்கள் இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள அனைத்து மரக்கன்றுகளையும் நாங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோம் என்று தன்னார்வத்தோடு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

முதல் நாளில் அலஞ்சிரங்காடு குருகுலம் அறக்கட்டளை பள்ளி மாணவர்கள் வழங்கிய 200 மண் பானைகளை மரக்கன்றுகளின் அருகில் வைக்கும் பணியினை செய்து தண்ணீர் ஊற்றினார்கள். தொடர்ந்து இளைஞர்களுடன் எங்கள் பணியும் தொடரும். விரைவில் கஜா புயலில் இழந்த மரங்களைவிட பல மடங்கு மரங்களை எங்கள் கிராமத்தில் வளர்த்தெடுப்போம் என்றனர் அந்த பெண்கள்.

தற்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சாணாகரை கிராமத்தில் இணைந்த மருதம் அறக்கட்டளை இளைஞர்கள் நீர்நிலைகளில் 2 ஆயிரம் பனை விதைகளையும், சாலை ஓரம் உள்பட பொது இடங்களில் பலவகை நாட்டு மரக்கன்றுகளையும் நட்டு பராமரிக்க தொடங்கி உள்ளனர்.
 

ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களும், பெண்களும் இப்படி களமிறங்கிளால் சில வருடங்களில் தமிழ்நாட்டை வளமாக்க முடியும். விரைவில் களம் காண்பார்கள்..

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.