Skip to main content

திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.
 

mk stalin

 

 

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் அதிக முக்கியத்துவம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்நிலையில், அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக பொது செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான வேலையில் ஈடுபடுவதற்காக திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக பொதுக்குழு அடுத்து எப்போது நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்