பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுல் ஒருவரான மீரா மிதுனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

meera mithun

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், தன்னிடம் மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாகக்கூறி 50000 ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டை காவல்துறையினர் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் நாளை (19.07.2019) விசாரணைக்காக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விசாரணைக்கு வருவதாக மீரா மிதுன் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு அதில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

ஏற்கனவே தெலுங்கானா காவல்துறையினர், மகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் அரங்கத்திற்குள்ளேயே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment