Skip to main content

'தலைவர் 168' ல் இணைந்த பிரபல நடிகை...புதிய அப்டேட்!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 168' எனறு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தி்ல் ரஜினி நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

 

rajini168-Rajinikant-KeerthySuresh

 

இந்நிலையில் 'தலைவர் 168' படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியுன் முதன்முறையாக நடிப்பது மகிழ்ச்சி அளித்திறது என்றும், நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு, படக்குழுவுக்கு நன்றி என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.  
 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்” - நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

This time the World Cup is for us actor Rajinikanth believes

 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (15.11.2023) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வேயை 13 ரன்களிலும், ரச்சினையும் 13 ரன்களிலும் முகமது ஷமி வெளியேற்றினார். ஆனால் சிறப்பாக ஆடிய மிட்செல் சதமடித்தார். அடுத்து வந்த சாப்மேனை குல்தீப் அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் ரன் ரேட் அழுத்தத்தால் சிக்சர் அடிக்க முயன்று ஷமி பந்தில் 134 ரன்களில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

This time the World Cup is for us actor Rajinikanth believes

 

இதற்கிடையே இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் தனது மனைவி லதாவுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி குறித்து பேசுகையில், “முதலில் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன். அதன் பின்னர் நியூசிலாந்து தரப்பில் 2, 3 என விக்கெட்டுகள் விழுந்ததும் ஆட்டம் நன்றாக சென்றது. கண்டிப்பாக இந்த முறை கப் (உலக கோப்பை) நமக்குத்தான். இந்தப் போட்டியில் வெல்ல 100 சதவீதம் முகமது ஷமிதான் காரணம்” என தெரிவித்தார். 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை” - சைரன் பட இயக்குநர்

 

siren movie director speech

 

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில்  ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதைப் பார்க்கையில் பரோலில் வெளிவந்த ஒரு கைதியை பற்றி சொல்வது போல் அமைந்துள்ளது.  

 

இந்த நிலையில் இப்படம் பற்றி இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் பேசுகையில், “இந்த படத்தில் அரசியல் இருக்காது. எல்லா விஷயங்களிலும் அரசியல் இருப்பது போல இந்த கதையிலும் அரசியல் இருக்கும். மற்றபடி நேரடியாக அரசியல் பேசியிருக்க மாட்டோம். ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை. படத்தில் சோசியல் மெசெஜ் மாதிரி ரெண்டு மூணு விஷயங்கள் பேசியிருக்கோம். அது திணித்தது போல் இருக்காது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்” என்றார்.