Skip to main content

கலைஞருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி! கைத்தறி நெசவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். திமுக ஆட்சியின் போது கைத்தறி நெசவாளர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்  குடியிருப்பு காலனிகளை உருவாக்கி கொடுத்தார் 

t

படிப்பது தவிர நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதால் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் டாக்டர் கலைஞர் அவர்களை என்றும் மறக்காமல் உள்ளனர். அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சின்னாளபட்டியில் உள்ள 18 வார்களிலும் கலைஞரின் திருவுருவ படம் வைத்து மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

z

 சின்னாளபட்டியில் நகர திமுக சார்பாக காமராஜர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன் பகுதியில் கலைஞரின் திருவுருவ படம் வைத்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர திமுக செயலாளர் தி.சு.அறிவழகன் தலைமை தாங்கினார். முன்னாள் அவைத்தலைவர் ஓ.பால்ராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

நிகழ்ச்சியில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நினைவஞ்சலியில் நகர பொருளாளர் எஸ்.ஆர்.முருகன், துணைச் செயலாளர்கள் சாந்தி பழனிச்சாமி, இராமநாதன், மற்றும் நகர திமுகவை சேர்ந்த ஆபிரகாம், முன்னாள் வார்டு உறுப்பினர் பாலாஜி, உட்பட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர். கலிக்கம்பட்டி ஊராட்சி கழகம் சார்பாக ஊராட்சி கழக செயலாளர் அருளரசன் தலைமையில் கலிக்கம்பட்டியில் கலைஞரின் திருவுருவ படம் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் வார்டு உறுப்பினர் பாபுகான், மாஸ்டர் பிரசாந் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்!

சார்ந்த செய்திகள்