Skip to main content

சாலையைக் கடக்க முயன்ற மான்.. வாகனத்தில் அடிபட்டுப் பலி

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Deer passed away in road accident

 

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சேத்துப்பட்டு வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஒரு புள்ளிமான் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வாகனம் புள்ளிமான் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த அந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்