Skip to main content

விடுதியில் ஆபாச நடனம் -15 சிறார்கள் மீட்பு!!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

திருவண்ணாமலை நகரம் ரமணா நகரில் சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது அருணை குழந்தைகள் விடுதி. ஆதரவற்ற நிலையில் உள்ள 11 வயதில் இருந்து 15 வயதுக்குட்பட்ட 15 பெண் குழந்தைகள் இங்கு தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

 

t

 

இன்று குழந்தைகள் நல அலுவலர்,  வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த மாணவிகள் தங்களை பாலியல் ரீதியாக இந்த விடுதியை நடத்தும் வினோத்குமார் தொந்தரவு செய்வதாகவும் அவருக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு கூறினார். 

 

அதனை தொடர்ந்து அந்த விடுதி மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வினோத்குமாரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விடுதியில் இருந்து மீட்கப்பட்ட 15 பெண் சிறார்களும் அரசு நடத்தும் விடுதிக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

ggg

 

இதுபற்றி அதிகாரிகள் சிலர் கூறும் பொழுது இரவு நேரங்களில் ஆபாச படங்கள் டிவியில் ஒளிபரப்பி அதனை அந்த இளம் சிறார்களை பார்க்க தூண்டி உள்ளனர், மேலும் ஆபாச நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தி, ஆடவைத்ததாக கூறப்படுகிறது என்றனர். 

 

இந்த விவகாரம் குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்