Skip to main content

'குபேரன் குலுக்கல்'-கோடிக்கணக்கில் மோசடி என பாதிக்கப்பட்டோர் புகார்!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பகுதியில் அம்பாள் சிட்பண்ட்ஸ், குபேரன் குலுக்கல் திட்டம், வீ.ஜே லேண்ட் புரமோட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் மூலம், கடந்த 2013 முதல் 2017 வரை பல தரப்பட்ட மக்களிடம் பல கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

SHIT FUND


இம்மனுவில் மனைப் பட்டா வழங்குகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து குலுக்கள் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திடம் சுமார் 50 ஆயிரம் வீதமும், வீ.ஜே லேண்ட் புரமோட்டர்ஸ் மூலம் ஒரு குடும்பத்திடம் 1,20,000 ரூபாயும், சிட் பண்ட்ஸ் மூலமாக 1000 -த்திற்கும் மேற்பட்டோரிடம்,  பல கோடி மோசடியில் ஈடுபட்டு, நிலத்தையும் தராமலும், கட்டிய பணத்தை கேட்டால்  கொலை மிரட்டல்  தருவதாக பாதிக்கப்பட்டோர் மனுவில் தெரிவித்திருக்கின்றனர்.

 

CUDDALORE;CHIT FUND ISSUE... PEOPLE CASE IN POLICE

 

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, விசாரணை மேற்கொள்ளாவிட்டால், ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதினால், விரைந்து நடவடிக்கையை வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் இந்நிறுவனத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் பணத்தைக் கட்டி ஏமாந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.