Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு; தடையை மீறி மறியல் போராட்டம்

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 

சிதம்பரம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமி மறுக்கப்பட்டது.  தடையை மீறி மறியல் போராட்டம் செய்ததால் அனைவரையும் கைது செய்தனர்.

 

c

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் ஹைட்ரோகார்பன் என்ற அபாய திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதனை கட்சியின் மாவட்ட செயலாளர் டி. ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் பேரணியை துவக்கிவைத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் சிறப்புரையாற்றினார். இதனைதொடர்ந்து பேரணி தொடங்கிய போது காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தடைவித்தது.

 

பின்னர் அனைவரும் இரு சக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று தடையை மீறி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு கிள்ளை கடைத்தெரு பகுதிக்கு வந்து கிள்ளை- பரங்கிப்பேடை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், ஜெயசீலன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவலிங்கம், மணி, வேல்முருகன், வினோபா, ஜீவா, பரமானந்தம், ஆழ்வார் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தமிழகத்தில் பாசன நீர் வற்றி போய் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத சூழல் உள்ளது. அதே போல் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அலைகிறார்கள். இந்த நேரத்தில் விவசாயம், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தடைசெய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

 

மக்களின் உணர்ச்சிகரமான சிறு சிறு போராட்டங்களை அரசு அடக்க முயன்றால் வெகுன்டெழுந்து தூத்துக்குடி சம்பவம் போல் தூப்பாக்கிசூட்டில் முடிந்தாலும் முடியும். தமிழக அரசின் காவல்துறை வேதாந்த நிறுவனத்தின் இதர நிறுவனமாக செயல்படுகிறது. தடைகள் பல விதித்தாலும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்