Published on 14/01/2021 | Edited on 16/01/2021
காவிரி டெல்டா தொடங்கி வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் வரை கடந்த 15 நாட்களுக்கும் மேலாகப் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான அத்தனை நெற்கதிர்களும் வயலில் சாய்ந்து கிடக்கிறது. சாய்ந்த கதிர்களின் மேலே தண்ணீர் ஓடுகிறது.
"மார்கழி மழை மண்ணுக்கும் ஆகாது" என்ற பழமொழிக்கேற்ப இப்போது நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள், கடலை, மிளகாய் செடிகள் அழுகி வருகின்றன. அதேபோல சோளப்பயிறும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
வௌஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்ந்தால் தான் விவசாயிக்கு மகிழ்ச்சி. ஆனால் வெளைஞ்ச வெள்ளாமை வீடு போய்ச் சேராமல் வயலிலேயே முளைக்கிறது டெல்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.