Skip to main content

கரோனா அச்சம்- சென்னையில் 10 விமானங்கள் ரத்து!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

coronavirus reflected chennai airport 10 flights cancel

இந்த நிலையில் கரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் 40% குறைந்துள்ளன. அதேபோல் குவைத், ஹாங்காங், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்களின் வருகையும், பயணிகளின் வருகையும் குறைந்துள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Airport roof collapse incident

டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள்,  ரயில் நிலையம்,  மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன.  இத்தகைய சூழலில் தான் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவலை தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் அதுல் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விமான  பயணி ஒருவர் கூறுகையில், " நான் பயணிக்க உள்ள விமானம் காலை 9 மணிக்கு  புறப்பட  உள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததை அறிந்தேன். இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து யாஷ் என்ற பயணி கூறுகையில், "பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு  காலை 08 : 15 மணிக்கு விமானத்தில் வந்தேன். இங்கு காலை 05 : 00  - 05 : 15 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது எனக் கேள்விப்பட்டேன்” எனத் தெரிவித்தார்.