Skip to main content

'கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு' - தமிழக அரசு அரசாணை!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

CORONAVIRUS MEDICAL TESTING TAMILNADU GOVERNMENT GAZETTE NOTIFICATION

 

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

 

அதன்படி, "தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வுக் கூடங்களில் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டப் பயனாளிகளுக்கும் பொது மக்களுக்கும் கரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான கட்டணம் ரூபாய் 800- லிருந்து ரூபாய் 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூபாய் 600- லிருந்து ரூபாய் 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக ரூபாய் 300 செலுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்