மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணமடைந்த வழக்கில் நில உரிமையாளர் சிவ சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் வசித்த 17 பேர் பலியாகினர். டிசம்பர் 2- ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து, கடந்த 3- ஆம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

COIMBATORE WALL COLLAPSE INCIDENT CHENNAI  HIGH COURT BAIL

Advertisment

Advertisment

இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது. எந்த உள் நோக்கத்துடன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமின் வழங்கினால், இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

COIMBATORE WALL COLLAPSE INCIDENT CHENNAI  HIGH COURT BAIL

இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்து தீர்ப்பை தள்ளிவைத்து இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (20.12.2019) தீர்ப்பளித்த நீதிபதி, சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 1 லட்சம் ரூபாய் பிணைத்தொகையும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதமும் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.