Skip to main content

எஸ்.ஐ உட்பட 13 போலீஸார் கூண்டோடு மாற்றம்! எஸ்.பி. எடுத்த அதிரடி முடிவு!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த எஸ்.ஐ. உள்ளிட்ட 13 பேர் கூண்டோடு மாற்றப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

corona virus -  Police Transfer issue



திருச்சி மாவட்ட எல்லைக்குள் நடக்கும் அத்தனை விவரங்களையும் சேகரித்து, அதை மாவட்ட கண்காணிப்பாளருக்கு தெரிவிப்பதற்காக இயங்கும் பிரிவை திருச்சி மாவட்ட தனிப்பிரிவு அல்லது நுண்ணறிவு பிரிவு என்பார்கள். இந்த குழுவில் உள்ள எஸ்.ஐ. ஸ்ரீதர் தொட்டியத்திற்கும், இளங்கோவன் சோம்பரசம்பேட்டைக்கும், பழனிதுரை லால்குடிக்கும், குமார் துறையூருக்கும், முருகேசன் ராம்ஜிநகருக்கும், எழுத்தர் பிரகாஷ் பெல் தொழிற்சாலைக்கும், ஏட்டு சோமசுந்தரம் சோமரசம் பேட்டைக்கும், கணிப்பிரிவில் பணியாற்றி வீரமணி சமயபுரத்திற்கும், சதீஷ் முசிறிக்கும், ரோமோமியோ துவாக்குடிக்கும், மதி திருவரம்பூருக்கும் என 13 பேரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிக்கு தூக்கியடித்தார் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக். 

நிர்வாக காரணத்திற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், தனிப்பிரிவு போலீஸார்களிடம் இருந்த ஈகோ பிரச்சனையும் இதற்கு ஒரு காரணம் என்று பணியாளர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.

  


 

சார்ந்த செய்திகள்