Skip to main content

பெண்களை இழிவுபடுத்தி அவதூறு பரப்பியதாக ஆ.ராசா மீது புகார்!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

 

Complaint- against a.raja- for insulting -and spreading -slander against- women!

 

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் நோக்கோடு பேசியதாக, தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் தலைமையில், வீடியோ ஆதாரங்களுடன் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளனர்.

 

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், தனி மனித ஒழுக்கமின்றி உண்மைக்கு மாறான செய்திகளைப் பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்டதாகவும் கூறி, ஆ.ராசா மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி, வீடியோ ஆதாரங்களுடன், டிஜிபியிடம் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர்கள் திருமாறன், செல்வகுமார் தலைமையில் 6 பேர் புகார் அளித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்; தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ்

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Armstrong's incident; Notice to Tamil Nadu DGP

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். இன்று பெரம்பூர் அயனாவரம் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து  தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்கக்கோரி பட்டியல் இனத்தவர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளிதழ் செய்தி அடிப்படையாக வைத்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ள பட்டியல் இனத்தவர் நல ஆணையம், படுகொலை என்பதால் தமிழக அரசு சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி விரைந்து பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

Next Story

தெலங்கானா டிஜிபி இடைநீக்கம்; தேர்தல் ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Suspension order of Telangana DGP revoked for Meeting with CM  Revanth Reddy;

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம், தேர்தல் விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அவர் மீண்டும் அவரது பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.