மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த இந்திய பிரதமர் மோடிக்கு தமிழகமே கருப்பு கொடி காட்டியது. இந்நிலையில் தேர்வுகால பதற்றத்தை கையாள்வது எப்படி என்ற மோடியின் நேரலை நிகழ்ச்சி திருச்சியில் ஈவேரா பெரியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ என்ற பெயரில் நடக்கவிருந்தது . இந்த நிகழ்ச்சிக்காக மாணவர்கள் பங்குபெற கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதனைப் நிராகரித்த மாணவர்கள் அந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும் இது கல்லூரி கலையரங்கமா? மோடியின் விளம்பர இடமா? என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர ஒலி எழுப்பினர். எக்ஸாம் பயிற்சிக்காக இல்லாமல் ஓட்டுக்காக நடத்திய ஒன்று என்று முழக்கங்களை எழுப்பினர். கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்ப மோடியின் நேரலை நிகழ்வு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் கலைந்து சென்றனர். நேரில் வந்தால் மட்டுமல்ல நேரலையில் வந்தாலும் எதிர்ப்புதான் என்பதை காட்டுவதாக இருந்தது இந்த சம்பவம்.