Published on 28/08/2020 | Edited on 28/08/2020
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நேற்று (27/08/2020) கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அப்போது, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம், காட்டூர் காவல்நிலையத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஊரடங்கு விதிகளை மீறி ஒன்று கூடுதல்,நோய் பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.