கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி மூலம் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய 15 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்துக்கொண்டனர்.
செப்டம்பர் 29- ஆம் தேதி, மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தலைமைச் செயலாளரின் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.