Skip to main content

பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (26/07/2021) நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்), தடய அறிவியல் துறை இயக்குநர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர். 

 

அதேபோல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்