Skip to main content

ரசாயன மீன்கள் விற்பனை... நள்ளிரவில் ரெய்டு... பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

 Chemical fish sale ... midnight raid ... public shock!

 

மதுரை மாட்டுத்தாவணி உட்பட பல இடங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரையில் மட்டும் நேற்றுமுதல் (13.07.2021) தற்போது வரை 600 கிலோ காலாவதியான மற்றும் ஃபார்மலின் எனும் வேதிப்பொருள் கலக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுவது மதுரையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கரிமேடு பகுதியில் அமைந்திருக்கும் மீன் சந்தையில் மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது. லாரிகள் மூலமாக மீன்கள் அந்த மார்க்கெட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் நிலையில், கரிமேடு மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இந்தநிலையில் இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன நல அலுவலர் ஜெயராமன் பாண்டியன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

 

 Chemical fish sale ... midnight raid ... public shock!

 

இப்படி திடீரென நடத்தப்பட்ட ஆய்வில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் பெட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 500 கிலோ மீன்கள் ரசாயனம் கலந்த மீன்களாகவும், கெட்டுப்போன மீன்களாகவும் இருந்தது தெரியவந்து, பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து மதுரையின் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. அதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி சந்தையிலும் நள்ளிரவில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

\

 Chemical fish sale ... midnight raid ... public shock!

 

மாட்டுத்தாவணி சந்தையில் மட்டும் இதுவரை 70 கிலோ ரசாயன மீன்கள் சிக்கியுள்ளன. இப்படி மதுரையின் முக்கிய மீன் விற்பனை நிலையங்களில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது மற்றும் ரசாயன மீன்கள் விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த மீன்கள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.