/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_131.jpg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டார். தேர்தல் திருவிழா தொடங்கும் முன் தன் குடும்பத் திருவிழா ஒன்றை நடத்த தடல்புடல் ஏற்பாடுகளைச் செய்தார். 5000 விருந்தினர்கள்... 108 கிடாய்... என பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா.அப்படி என்ன விழா அது!
நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி நேரடி அரசியலில் களமாடிவந்த சீமான், நெடுநாட்களாக திருமணம் செய்யாமல் இருந்தார். தான் ஒரு ஈழத்தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் காளிமுத்துவின் மகளான கயல்விழிக்கும் சீமானுக்கும் காதல் மலர்ந்து, 2013ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு மகன் பிறந்தார். தனது மகனுக்கு 'மாவீரன் பிரபாகரன்' என்று பெயர் சூட்டினார் சீமான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_635.jpg)
தன் மகன் மாவீரன் பிரபாகரனின் முதல் பிறந்தநாளை 2020 ஜனவரியில் கொண்டாடிய சீமான், தற்போது அவருக்குக் காதுகுத்தும் விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தினார். சிவகங்கை அருகிலுள்ள தனது குலதெய்வம் வீரகாளியம்மன் கோவிலில் தனது மகனுக்குக் காதுகுத்து விழா நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கில் விருந்தினர் பங்கேற்றனர். மேலும் அதில், 108 ஆடுகள் வெட்டப்பட்டன. இந்த விழாவுக்காக 500, 500 கிலோவாகப் பிரித்து சமையல் நடந்தது. இந்த விழாவால் நாம் தமிழர் தம்பிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல் திரைப்பட இயக்குனர் பாரதி ராஜவும் இந்த விழாவில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)