Skip to main content

நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள்; அறநிலையத்துறை கடிதம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Charity Department letter construction work is Nataraja temple without permission

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிங்க பெருமாள் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

 

அதில் நடராஜர் கோவிலை ஆய்வு மேற்கொண்டபோது கோயிலின் தெற்கு ராஜகோபுரம் அருகில் இடது மற்றும் வலது புறத்தில் இடம் சுத்தப்படுத்தப்பட்டு மதில் சுவரில் மறைப்புகள் கட்டப்பட்டும் இருப்பது தெரிய வருகிறது. மேற்படி சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் என்ன பணிகள் மேற்கொள்ள உள்ளது.  என்பது குறித்தும் கட்டுமானங்கள் மேற்கொள்ள தொல்லியல் துறை, நகராட்சி அனுமதி, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெறப்பட்டிருப்பின் அது குறித்த விவரத்தினை அளித்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

மேற்படி இக்கோயிலில் புதிய கட்டுமானங்கள் கட்டுவது குறித்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தொடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்ள இடமானது சுத்தப்படுத்தப்பட்டு மறைப்புகள் கட்டப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி தொல்லியல் துறை கருத்துரு பெற்று மண்டல மாநிலக் குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னரே திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் மேற்கொண்டால் துறை ரீதியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்து அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Demonstration against Chidambaram Nataraja temple deities

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக சைவ வைணவ பாகுபாட்டால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது கோவிந்தராஜ பெருமாள் கோவில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது இதற்கு இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த போது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே தெய்வீகபக்தர்கள் பேரவை சார்பில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்களை கண்டித்தும் பிரம்மோற்சவம் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தி அரை நிர்வாண கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மக்கின், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வி எம் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்தும், பிரம்மோற்சவம் நடத்த அனைத்து ஏற்பாடுகளுக்கும் எந்தவித தடையும் விதிக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story

போலி சான்றிதழ்; நடராஜர் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட மாஃபியா கும்பல் கைது!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Gang including Nataraja temple Dikshitar arrested for fake certificates in Chidambaram

சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(18.6.2024) இரவு அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது.  இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  அதன் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கிடந்த சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை செய்த போது போலி சான்றிதழ்கள் எனத் தெரியவந்தது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவருடன் நாகப்பன் மற்றும் வேறு ஒருவரும் தொடர்பில் இருந்துள்ளார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

பின்னர் இது குறித்து சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் உள்ள அனைத்து விதமான பல்கலைக்கழகங்களுக்கும் இவர்கள் 5000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை அச்சடித்து விற்பனை செய்துள்ளதும் மேலும் 1000-த்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அச்சடித்து வழங்குவதற்காக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 
 

Gang including Nataraja temple Dikshitar arrested for fake certificates in Chidambaram
சங்கர் - நாகப்பன்

இவர்கள் போலி சான்றிதழ் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் போலி சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இவர்கள் வழங்கிய போலி சான்றிதழ்களை வைத்து பல்லாயிரம் கணக்கானோர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்களா? மேலும் இந்தப் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் செய்வதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் இதன் நெட்வொர்க் உள்ளதா? இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் பெரும் புள்ளிகள் சிக்குவார்களா எனக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.