Nirmala Periasamy Interview

2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் 05.10.2018 வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Advertisment

இதற்கு ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முனுசாமி, அதிமுகவினரை குழப்ப வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று கூறினார். அமைச்சர் தங்கமணி, தினகரனை ஒருபோதும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மாட்டார் என்றார்.

Advertisment

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுகவின் நிர்மலா பெரியசாமி:-

எனக்கு தெரிந்தவரை அமைச்சர் தங்கமணி தான் என்ன பேசுகிறோம் என்று புரிந்து பேசக்கூடியவர். ஆனால் தினகரன் தரப்பில் பரபரப்பை கிளப்புவதற்காக என்னவேண்டுமானாலும் பேசக்கூடியவர்கள்.

Advertisment

ஒரு வாரத்தில் கலையும், ஒரு மாதத்தில் கலையும், ஆட்சி இதோ போகப்போகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த தினகரனுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் விரத்தியில் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடப்பதை அவரால் பொறுக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெற்றிக்கரமாக நடந்தது. ஜெயலலிதா இருந்தால் எப்படி தேர்தல் பணிகளை முதலில் ஆரம்பிப்பார்களோ, அதைப்போலவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் முதல் முறையாக அதிமுக நடத்தியது.

18 எம்எல்ஏக்கள் வழக்கு விரைவில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். சட்ட வல்லுநர்கள் சபாநாயகர் தீர்ப்புக்கு மாறாக வராது என்று சொல்லுகிறார்கள். ஒருவேளை அதுசம்மந்தகமாக தினகரனுக்கு தகவல் தெரிந்ததோ என்னவோ தெரியவில்லை. அங்கே உள்ள 18 எம்எல்ஏக்களும் ஒரு புழுக்கத்தில் உள்ளதாக கேள்விப்டுகிறோம். எப்ப வெளியில் விடுவார்கள் என்ற வேகத்தில் இருப்பதாக தெரிகிறது.

இதனால் விரத்தியின் உச்சத்திற்கு சென்ற தினகரன், ஏதாவது ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதால் இப்படி பேசுகிறார். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஒற்றுமையை கலைக்க இப்படி கொளுத்தி போடுகிறார். எதுவாக இருந்தாலும் ஆதாரத்தை வெளியிட்டுவிட்டு பேச வேண்டும். இது தினகரனுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும்.

ஏற்கனவே தினகரன் மீது அதிமுக தொண்டர்கள் வெறுப்பில் உள்ளனர். இந்த மாதிரியான அரசியல் செய்தால் நூறு சதவீதம் இல்லை, இருநூறு சதவீதம் தினகரனை புறக்கணிக்கும் மனநிலைக்கு வருவார்கள்.

ஓ.பி.எஸ். - தினகரன் சந்தித்தது எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது. அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியிருக்கிறாரே?

கனகராஜ் அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவரும் கருத்து சொல்லலாம். அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் சொல்வதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.