Skip to main content

மீரா மிதுன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுன், கடந்த 14ஆம் தேதி கேரளாவில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளான 15ஆம் தேதி காலை சென்னை அழைத்துவரப்பட்டார். 

 

விசாரணையில் வாக்குமூலம் தர மறுத்த மீரா மிதுன், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துவருகிறார் என கூறப்பட்ட நிலையில், 15ஆம் தேதி அன்றே அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மீரா மிதுனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீரா மிதுனை போலீசார்  சிறையிலடைத்தனர். இந்நிலையில் மீரா மிதுனை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்திய நிலையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.எம்.பி  நகரை சேர்ந்த ஜோ மைக்கேல்  என்பவரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மீரா மிதுன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் மற்றும் கேமராக்கள் அனுமதி மறுக்கப்பட்டன. பின்னர் நிருபர்கள் மட்டும் உள்ளே சென்றனர். இதைப் பார்த்த போலீசார் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி அனைவரையும் வளாகத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் செய்தியாளர்களுக்கு போலீசாருக்கும் இடையே  சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.  'எவ்வளவோ பெரிய தலைவர்களெல்லாம் வரும்போது அனுமதி அளித்த போலீசார் ஒரு நடிகைக்காக செய்தியாளர்களை நீதிமன்ற வளாகத்தில் உள்ளே அனுமதிக்காதது என்ன நியாயம்' என புலம்பியபடியே சென்றனர் செய்தியாளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்