‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டியவர்கள் மீது சட்டப்படி உரிய வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதேபோல், ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமுதாயத்தை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்தியதாக வலிந்து சித்தரித்து, அமைதியாக இருக்கும் தமிழ்ச்சூழலில் வேண்டுமென்றே தேவையற்ற பதற்றத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் உருவாக்குகிறார் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்.
அவர் மீதும், ‘சூர்யாவின் படம் வெளியாகும் திரையரங்குகளைக் கொளுத்துவோம், சூர்யா நடமாட முடியாது’ என பேசிய காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் மற்றும் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு இலட்சம் ரூபாய் சன்மானம்’ என அறிவித்த மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் மீதும் பொது அமைதியை சீர்குலைக்க, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டு பண்ண முயற்சித்ததற்காக சட்டப்படி உரிய வழக்குப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்.